- தினசரி வர்த்தகத்தில் உங்களுடைய தேவையை எவ்வளவு என்று உறுதிசெய்து கொள்ளவேண்டும் உதாரணதிற்கு ஒரு நாளைக்கு ரூபாய் 1000 என்றால் எக்காரணம் கொண்டும் அதை 100 நாட்களுக்கு (மூன்று மாதம்) மாற்றகூடாது நீங்கள் வணங்கும் கடவுளே இன்றைக்கு இதை வர்த்தகம் செய்யுங்கள் உங்களுக்கு 10000 கிடைக்கும் என்று சொன்னால் கூட அவரை வணங்கி உங்கள் தகவல்களுக்கு நன்றி எனக்கு அந்த பணம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்
- எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்ககூடாது ஏனென்றால் உங்களது பொறுமையை இழக்க செய்துதான் உங்களை முட்டாளாக்க முடியும் எனவே எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்க கூடாது
- PREPLAN செய்யகூடாது இன்றைக்கு மார்க்கெட் இப்படித்தான் இருக்கும் நாளைக்கு மார்க்கெட் இப்படித்தான் இருக்கும் என்று முன்கூட்டியே உறுதிசெய்ய கூடாது
- உங்களது தேவை (TRADE) கம்ப்யூட்டர் ஆப் செய்துவிட்டு வேறுவேலை செய்யவேண்டும் எக்காரணம் கொண்டு இன்னொரு TRADE செய்யகூடாது
- பங்குசந்தை ஏரினலோ இறங்கினலோ எவ்வித பதட்டமோ பயமோ அடையாதிர்கள் மற்றும் அதை பற்றி கவலையும் படாதிர்கள்
- ஏன் ஏறியது என்றும் ஏன் இறங்கியது என்றும் மற்றும் உலக பங்குசந்தை களின் நிலவரங்களை போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடாதிர்கள்
- எவ்வித வெளியுலக செய்திகளை மனதில் போட்டு கொண்டு TRADE செய்யகூடாது குறிப்பாக வெளிநாடு சந்தை நிலவரங்களை பற்றி தெரிந்து கொள்ளவே கூடாது
- EXPOSURE/LIMITE கட்டாயம் எடுக்ககூடாது அதாவது உங்களிடம் இருக்கும் CAPITAL க்கு ஒவ்வொரு நிறுவனமும் EXPOSURE LIMIT என்று உங்களுக்கு வாரி வழங்குவார்கள் அதை எக்காரணம் கொண்டு அதிக அளவில் பயன் படுத்த கூடாது .
- EXPOSURE என்பது உங்களது CAPITAL முழுவதையும் பாதிக்க செய்யும் மறைமுக எதிரி ஆகும் பெரும்பான்மையான சராசரி TRADER கள் இதை ஏற்றுகொள்ள மாட்டார்கள் காரணம் EXPOSURE தரும் நிறுவனம் நல்ல நிறுவனம் என்ற மாயை அவர்களது மனதில் மேலோங்கி நிற்கும் பங்குசந்தை பொருட்சந்தை என்றால் EXPOSURE பத்து முறை அளவு எடுத்துகொள்ளலாம் அதுவும் போதுமான CAPITAL இருந்தால் மட்டுமே இதை நீங்கள் செய்யவேணும் குறைவான CAPITAL வைத்துகொண்டு EXPOSURE எடுக்ககூடாது
- உங்களின் எதிர்பார்ப்புக்கு மேல் பங்குசந்தையில் உங்களுக்கு பண ஆசை வரக்கூடாது அப்படி ஒருவேளை உங்களின் எதிர்பார்ப்புக்கு மேல் ஆசை வந்தால் அது உங்களது CAPITAL முழுவதையும் பாதிக்கும் சம்பவமாக இருக்கும்
- பங்குசந்தை மற்றும் பொருட்சந்தை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் கருத்துக்கள் உள்ள நபர்களிடம் பழகாதிர்கள்
- அளவுக்கு அதிகமாக இருக்கும் இடத்தில அளவோடு எடுக்கும் பண்பை வளர்த்து கொள்ளுங்கள்
- HIGH கட் செய்யும்போது LOW கட் செய்யும்போது எமோஷனல் என்ட்ரி செய்யகூடாது
- பங்குசந்தையில் ஒரு SCRIPT TRADE செய்யும்போது அதனுடைய TARGET மட்டும்தான் எதிர்பார்க்க வேண்டும் அவசரம் அவசரமாக TRADE ஐ முடித்து விட்டு இன்னொரு TRADE செய்யகூடாது
- பங்குசந்தையின் நாடியை நன்றாக பிடித்து கொள்ளுங்கள் பிடிக்க கற்றுக்கொள்ளுங்கள் நீங்கள் நாடி போகும் அனைத்தும் பங்குசந்தை உங்களுக்கு வாரி வழங்கி வாழ்த்தி விட்டு செல்லும்
- உங்களின் பொருளாதார நிலை மென்மேலும் மென்மேலும் வளர்ச்சி அடைந்து முழுமையான பண சுதந்திரம் அடைவீர்கள் என்பது உறுதி வாழ்த்துக்கள் !
- NOENTRY FINANCIAL SOLUTION விதிகளின் படி மேலே உள்ள ஏதேனும் ஒன்றை மீறும் நபராகவோ அல்லது அதற்கு எதிராக செயல்படும் நபராகவோ நீங்கள் இருக்குமேயானால் உங்களது முதலீட்டை முழுவதும் கட்டாயம் இழக்கும் அபாயத்தை அடைவீர்கள் …..